விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 அக்டோபர், 2018

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இளம் தமிழ் ஆய்வாளர் விருது - 2018


முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் 
 'இளம் தமிழ் ஆய்வாளர்' விருது - 2018


தமிழில் முனைவர் பட்டம் பெற்று, நூல்கள் பல படைத்து மாநில, பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் ஆய்வரங்குகளிலும் பங்கேற்றுத் தமிழாராய்ச்சியில் சிறந்து விளங்கும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இணைப் பேராசிரியர், தமிழ் ஆய்வாளர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களைப் பாராட்டி, தமிழக அரசு அவருக்கு 'இளம் தமிழ் ஆய்வாளர்' விருது வழங்கியது. சென்னை, நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 30.9.2018 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50 பொன்விழா நிகழ்வில், தமிழக முதல்வர் அவர்கள் இந்த விருதுதினை அருக்கு வழங்கினார். 

இளந்தமிழ் ஆய்வாளர்




புதன், 7 மார்ச், 2018

முனைவர் ஆ.மணவழகன் பெற்ற விருதுகள் - Awards received by Dr.A.Manavazhahan



முனைவர் ஆ.மணவழகன் - பெற்ற விருதுகள்




1. முனைவர் ஆ.மணவழகன், குடியரசுத் தலைவரின் “இளம் ஆய்வு அறிஞர் விருது” - 2007-08. 


2. முனைவர் ஆ.மணவழகன், சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழ்நாடு அரசு விருது, 3.04.2015

நூல் – தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்2013.



3. முனைவர் ஆ.மணவழகன், வாழ்நாள் சாதனையாளர் விருது, சென்னை, 27.11.2016


4. முனைவர் ஆ.மணவழகன், கவிச்செல்வர் விருது : திருவள்ளூர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம், 25.06.2017


5. முனைவர் ஆ.மணவழகன்,  புலியூர்க்கேசிகன் விருது: புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை, சென்னை. 29.7.2017


6. முனைவர் ஆ.மணவழகன், நற்றிமிழ்ச் செல்வர் விருது : கபிலர் முத்தமிழ்ச் சங்கம், திருக்கோவிலூர், 27.08.2017


7. முனைவர் ஆ.மணவழகன், இலக்கியச் செம்மல் விருது: தென்சென்னைத் தமிழ்ச் சங்கம், சென்னை. 03.12.2017


8. முனைவர் ஆ.மணவழகன், சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழ்நாடு அரசு விருது - II , 2018.



9. முனைவர் ஆ.மணவழகன், தமிழ்நாடு அரசின் இளந் தமிழ் ஆய்வாளர் 2018 விருது,

தமிழ்நாடு பொன்விழா 50, தமிழ்நாடு அரசு. 30.09.2018



10. முனைவர் ஆ.மணவழகன், நற்றமிழ்க் காவலர் விருது: லகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – தமிழ்நாடு அரசு,   இலக்கியப் பட்டறை  இலக்கியப் பேரவை, பன்னாட்டுத் தமிழ் மாநாடு. 13.10.2019.


11.முனைவர் ஆ.மணவழகன், பண்பாட்டுக் காப்பாளர் விருது: தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம்,தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் அறக்கட்டளை, தமிழ்ப் பரம்பரை சித்த மருத்துவப் பயிற்சி ஆய்விருக்கை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு. 10.01.2020.

 


புதன், 28 ஜூன், 2017

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது


தமிழ்நாடு திருவள்ளுவர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் சார்பில், 25.06.2017 அன்று முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்குக் கவிச்செல்வர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

சனி, 21 நவம்பர், 2015

தமிழறிஞர் - முனைவர் ஆ.மணவழகன் (DR. A.MANAVAZHAHAN)


பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தம்முடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுவரும் தமிழறிஞர் வரிசை இடுகையிலிருந்து...


முனைவர் ஆ.மணவழகன் (Dr.A.Manavazhahan) இளந்தலைமுறை தமிழாய்வாளர். சமூக உணர்வாளர். தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியம், கணினித்தமிழ் ஆகிய துறைகளில் சிறந்த ஆய்வுகளோடு, படைப்பிலக்கியத்திலும் திறன் படைத்தவர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டமும் பெற்றார் . உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். கணினித்தமிழிலும் ஆர்வம் உள்ள இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆய்வாளராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்குள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005)’, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007)’, ‘தொலைநோக்கு (2008)’, ‘பழந்தமிழர் தொழில்நுட்பம் (2010)’, ‘தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம் (2013)’ போன்ற தமிழ்ச் சமுதாயம்பற்றி ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். ‘கூடாகும் சுள்ளிகள் (2010)’ என்ற ஒரு மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள் பலவற்றில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். ‘உயிரோவியம் (சங்க இலக்கியக் காட்சிகள்)’, ‘காந்தள் (தமிழ் மொழிக் கையேடு)’, ‘ சொல்லோவியம் (படவிளக்க அகராதி)’ போன்ற கணினித்தமிழ்த் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். சங்க கால இலக்கியங்கள் பற்றி ஆய்வுகளில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக 2007-2008 ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர் விருது’ (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன விருது) இவருக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மூலம் ‘இளம் படைப்பாளி’யாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய ‘தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’ என்ற நூல், தமிழக அரசின் 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசினைப் பெற்றுள்ளது.

வியாழன், 19 மே, 2011

கலைஞரிடம் விருதுத் தொகை பெற்ற முனைவர் ஆ.மணவழகன்


கலைஞரிடம் விருதுத் தொகை பெறும் முனைவர் ஆ.மணவழகன்

           செம்மொழித் தமிழ் அறிவுத் திறத்திறத்திலும் நூற் புலமையிலும் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்குக் குடியரசுத் தலைவரின் மூதறிஞர் விருதும், இளம் ஆய்வறிஞர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று நடுவண் அரசு முதல் முதலாக அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி, முதல் அறிவிப்பில் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் மூதறிஞர் மற்றும் இளம் ஆய்வறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

     நடுவண் அரசின் இந்த அறிவிப்பின்படி, 2007-2008ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் ஆய்வறிஞர்’  விருது முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 

            இந்த விருதானது சான்றிதழோடு, ஒரு இலட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியது.  28.03.2010 அன்று சென்னையில் நடந்த விழாவில், மத்திய அரசு அறிவித்த செம்மொழித் தமிழின் இளம் அறிஞர் விருதுத்கான தொகை ரூபாய் ஒருலட்சத்தை, தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அறிஞர் பெருமக்களுக்கு வழங்கி சிறப்புசெய்தார். படத்தில், முதல்வர் அவர்களிடமிருந்து காசோலை பெரும் ஆய்வறிஞர் முனைவர் . மணவழகன் அவர்கள்.

 

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது


    செம்மொழித் தமிழ் அறிவுத் திறத்திறத்திலும் நூற் புலமையிலும் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்குக் குடியரசுத் தலைவரின் மூதறிஞர் விருதும், இளம் ஆய்வறிஞர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று நடுவண் அரசு முதல் முதலாக அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி, முதல் அறிவிப்பில் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் மூதறிஞர் மற்றும் இளம் ஆய்வறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

       நடுவண் அரசின் இந்த அறிவிப்பின்படி, 2007-2008ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் இளம் ஆய்வறிஞர் விருதினை முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பெற்றார். இவ்விருதை, 06.05.2011 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள் வழங்கினார்.