புதன், 7 மார்ச், 2018

முனைவர் ஆ.மணவழகன் பெற்ற விருதுகள் - Awards received by Dr.A.Manavazhahan



முனைவர் ஆ.மணவழகன் - பெற்ற விருதுகள்




1. முனைவர் ஆ.மணவழகன், குடியரசுத் தலைவரின் “இளம் ஆய்வு அறிஞர் விருது” - 2007-08. 


2. முனைவர் ஆ.மணவழகன், சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழ்நாடு அரசு விருது, 3.04.2015

நூல் – தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்2013.



3. முனைவர் ஆ.மணவழகன், வாழ்நாள் சாதனையாளர் விருது, சென்னை, 27.11.2016


4. முனைவர் ஆ.மணவழகன், கவிச்செல்வர் விருது : திருவள்ளூர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம், 25.06.2017


5. முனைவர் ஆ.மணவழகன்,  புலியூர்க்கேசிகன் விருது: புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை, சென்னை. 29.7.2017


6. முனைவர் ஆ.மணவழகன், நற்றிமிழ்ச் செல்வர் விருது : கபிலர் முத்தமிழ்ச் சங்கம், திருக்கோவிலூர், 27.08.2017


7. முனைவர் ஆ.மணவழகன், இலக்கியச் செம்மல் விருது: தென்சென்னைத் தமிழ்ச் சங்கம், சென்னை. 03.12.2017


8. முனைவர் ஆ.மணவழகன், சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழ்நாடு அரசு விருது - II , 2018.



9. முனைவர் ஆ.மணவழகன், தமிழ்நாடு அரசின் இளந் தமிழ் ஆய்வாளர் 2018 விருது,

தமிழ்நாடு பொன்விழா 50, தமிழ்நாடு அரசு. 30.09.2018



10. முனைவர் ஆ.மணவழகன், நற்றமிழ்க் காவலர் விருது: லகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – தமிழ்நாடு அரசு,   இலக்கியப் பட்டறை  இலக்கியப் பேரவை, பன்னாட்டுத் தமிழ் மாநாடு. 13.10.2019.


11.முனைவர் ஆ.மணவழகன், பண்பாட்டுக் காப்பாளர் விருது: தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம்,தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் அறக்கட்டளை, தமிழ்ப் பரம்பரை சித்த மருத்துவப் பயிற்சி ஆய்விருக்கை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு. 10.01.2020.

 


வாழ்வியல் பாடத்திட்டம் தேவை - ஆ.மணவழகன்




ஆ.மணவழகன், தினமணி 29.7.17

குச்சிக் கிழங்கு - ஆ.மணவழகன்






குச்சிக் கிழங்கு



மழைக்குத் தவமிருக்கும் – என்
குச்சிக் கிழங்குக் காட்டில்
அடர் கோரை நீ
மண் தின்று மண் தின்று
முளைவிடும் உன் இருப்பை
எதைக்கொண்டும் அழிக்க இயலாமல் தவிக்கும்
ஏழை விவசாயி நான்….
கூர்முகங்கொண்டு குத்தி எறியும்
காட்டுப் பன்றிக்குத் தெரியவா போகிறது
கோரைக் கிழங்கிற்கும்
குச்சிக் கிழங்கிற்குமான வேறுபாடு!

-ஆ.மணவழகன், 28.8.17

பழந்தமிழக மகளிர் வீரம் - ஆ.மணவழகன்



விதைத்தலும் அறுவடை செய்தலும் வீரத்திற்கும் பொருந்தும். வீரத்தையும் மண் பற்றையும் விதைப்பதில் பெண்களே கைதேர்ந்த உழவர்கள். சங்க இலக்கியத் தாயொருத்தியின் மற உணர்வையும் மண் பற்றையும் பெண்பாற் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நயம்பட உரைக்கிறார்.

‘முன்நாள் நடந்த போரில், இவளுடைய தந்தை போர்க்களத்தில் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான். நேற்று நடந்த போரில், இவளுடைய கணவன் பகைவர்கள் பெரும் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லாமல் தடுத்துநின்று போரிட்டு வீரமரணமடைந்தான். இன்றும் போருக்கு எழுமாறு வீரரை அழைக்கும் முரசின் ஒலி கேட்கிறது. இவளோ அறிவு மயங்கி, உறவென்று தனக்கிருக்கும் ஒரே மகனையும் போர்க்கோலம் பூணச்செய்து, கையிலே வேலைக்கொடுத்துப் போருக்கு அனுப்புகிறாள். இவள் துணிவு கொடியது. இந்தக் கொடிய முடிவினை எடுத்த இவளது சிந்தை கெடுக!

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
------- ------------------- ---------------
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே! (புறம்.279)


- முனைவர் ஆ.மணவழகன்









வயநாரம் - வாதநாரம் - வாதநாராயணம் மரம் - ஆ.மணவழகன்


வயநாரம் - வாதநாரம் - வாதநாராயணன் மரம்

வீட்டுக்குப் பின்புறம் வரிசைகட்டி நிற்கும்!
ஊஞ்சல் கட்டி ஆடவும் உச்சியேறி ஒலி எழுப்பவும்
கிளைகள் பரப்பி காத்திருக்கும்!
ஏறவும் இறங்கவும் தொங்கவும் குதிக்கவுமாக
எங்களுக்கு அது ஒரு விளையாட்டுப் பூங்கா!
கொடாப்பில் குடியிருக்கும் குட்டிகளுக்கும்
பட்டியில் கட்டியிருக்கும் ஆடுகளுக்கும்
இதன் தழையே பிடித்தமான தீனி!
சூட்டுக் கடுப்பிற்கும் நகச் சுத்திக்கும்
பெயர்சொல்லா இதன் இலையே நன் மருத்து!
நாற்றங்காலுக்கும் நடவு வயலுக்கும்
நல்ல தழையுரம் வேம்பும் இதுவுமே!
ஒன்னா மண்ணா கிடந்து
ஒதுங்கிப்போன உறவுகளுள் இதுவும் ஒன்று!
வெங்கடேசன் அருளால் கொண்டுவந்து நட்டாயிற்று
உறவுகள் ஒதுக்கினாலும்
ஒதுங்க நிழல் கொடுக்கும் வாதநாரம் !

(மருந்திற்காகப் பல நாட்களாகச் சென்னை முழுவதும் தேடியும் கிடைக்காமல் போன வாதநார மரத்தை, கிராமத்தில் கண்டறிந்து அதன் கிளைகளோடு வந்த தலைமைச் செயலகச் சுற்றுலாத் துறை நண்பர் திரு. வெங்கடேசன் அவர்கள் என்னிடத்திலும் ஒன்றைக் கொடுத்தார். அது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடப்பட்டது(7.2.18). நன்றி - விநாயகம், விசயன்.) - முனைவர் ஆ.மணவழகன் (Dr.A.Manavazhahan)


வேட்கையில் எரியும் பெருங்காடு - கவிதைநூல் அறிமுகம்


சென்னை, கவிக்கோ அரங்கில் கவிஞர் பச்சியப்பன், கவிஞர் ப.இரவிக்குமார், கவிஞர் ப.கல்பனா ஆகியோரின் கவிதைகள் உள்ளிட்ட ஐந்து நூல்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது (9.2.18).  நிகழ்வில்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

உடன், நூலாசிரியர்களோடு எழுத்தாளர் பேரா.பாரதிபுத்திரன் கல்கி இதழாசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, பேரா. முனைவர் க.பஞ்சாங்கம், கலைவிமர்சகர் இந்திரன், கவிஞர் ஹாஜாகனி, எழுத்தாளர் சுந்தரபுத்தன், கவிஞர் நாகரத்தினம் கிருஷ்ணா, கவிஞர் தமிழ் மணவாளன் உள்ளிட்டோர்.


வாழ்த்துரை இணைப்பு - 
https://youtu.be/fzVarNotQto







உலக மருத்துவத்தின் முன்னோடி தமிழர் மருத்துவம் - முனைவர் ஆ.மணவழகன்


தினமணி, 19.02.2018